தந்தையும் நீயே…..
பல்லவி
தந்தையும் நீயே தாயும் நீயே
எந்தையே எனக்கருளும் சென்ன கேசவா
அனுபல்லவி
பந்துவும் நீயே தோழனும் நீயே
முந்தைய பழவினை களைந்திடும் தேவா
சரணம்
மந்தையிலுழன்றிடும் ஆடு போல் திரிந்தேன்
உன் தயை தந்தெனை ஆண்ட தெய்வமே
சிந்தையில் வைத்துன் சீரடி போற்றினேன்
விந்தைகள் புரிந்திடுமீசனே என் நேசனே
No comments:
Post a Comment