பார்த்தசாரதி…
பல்லவி
பார்த்தசாரதியே பரிபாலித்தருள்வாய்
நாற் திசையும் புகழ் விளங்கும் கேசவனே மாதவனே
துரிதம்
நாரதர் நான்முகன் நரர் சுரரிந்திரன்
சுகசனகாதியரனைவரும் துதித்திடும்
அனுபல்லவி
மூர்த்தி தலம் தீர்த்தமென அனைத்திலும் புகழ் விளங்கும்
கீர்த்திமேவும் திருவல்லிக்கேணி வளர்
சரணம்
மார்பணியாயன்னை வேதவல்லியை வைத்திருக்கும்
பார்த்திபனே பார்வதி சோதரனே
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்த கோபன் குமரனே
பார் புகழும் வேங்கட கிருஷ்ணனெனும்
தேர் நடத்தி பாரதப் போர் நடத்திய கண்ணனே
ஆர்த்தெழுந்த கௌரவரை அழிந்திடச்செய்தவனே
கார்மேகவண்ணனே கதிரொளியுடையோனே
நீர் மலைமேல் நின்றருளும் நீர்வண்னும் நீயே
No comments:
Post a Comment