Saturday, 4 February 2023

கடைக்கண்…..

 கடைக்கண்…..

             பல்லவி

கடைக்கண் பார்த்தால் போதும்   கடைத்தேறிவிடுவேன்

 விடைவாகனன் சிவன் விரும்பும்  துணைவியே

          அனுபல்லவி

இடைக்குலத்துதித்த கேசவன் சோதரியே

படைத்தல் காத்தல் அழித்தல் புரிபவளே

            சரணம்

இடைசிறுத்தவளே இன்னருள் புரிபவளே

சடையனிடம் கொண்ட சர்வேச்வரியே

அடைந்துன் பதம் பணிந்தேன் சமயபுரத்தாளே

 தடையின்றித் தாயே தயவுடன் நீயே

No comments:

Post a Comment