குடமுழுக்கு காணும்……
பல்லவி
குடமுழுக்கு காணும் சிங்கை ஶ்ரீமாரியை
வலையொளியில் கண்டு மனமாரத்துதித்தேன்
துரிதம்
சுரபதி பசுபதி ஶ்ரீபதி ரதிபதி
சரச்வதியின் பதி நரர் சுரர் வணங்கிடும்
அனுபல்லவி
விட அரவணிந்தவளை கேசவன் சோதரியை
விடமுண்ட கண்டன் சிவபெருமான் நாயகியை
சரணம்
புடமிட்ட பொன்னென சொலிக்கும் அம்பிகையை
இடக்கையில் பாசமும் வலக்கையிலங்குசமும்
உடன் வைத்திருப்பவளை உலகநாயகியை
மடக்கிய இடக்காலுடன் வீற்றிருப்பவளை
No comments:
Post a Comment