அங்கயற்கண்ணி…..
பல்லவி
அங்கயற்கண்ணி சங்கரியுனைத் துதித்தேன்
மங்காத புகழ் மேவும் மதுராபுரி ராணி
அனுபல்லவி
பங்கய நாபன் கேசவன் சோதரியே
சங்கரன் ஆலவாயழகன் நாயகியே
சரணம்
செங்கதிரோனொளியைப் பழிக்கும் தேசுடையாளே
அங்கமில் மதனுக்கு அருள் தந்த ஈச்வரியே
சிங்க வாகனம் தனிலமர்ந்த கௌரியே
சிங்காரக் கிளியேந்தும் மரகத மீனாக்ஷியே
No comments:
Post a Comment