You saved an elephant in distress, you killed an: elephant in the rut. You came as grazing cowherd lad and ate the stolen white butter. You lifted high the mountain and you stopped the foaming rains above. You killed the bulls in contest for the dark eyed lady Nappinnai!
கஜேந்திரனைக் காத்தாய், குவலயாபீடமென்ற ஒரு யானையைக் கொன்றாய், பசுக்களை மேய்த்தாய், நெய்யை உண்டாய், ஆவொடு ஆயரையும் குடைக்கீழ் சேர்த்தாய், நப்பின்னையை அடைய ஏழு எருதுகளைக் கொன்றாய். நீ மாயன்!
”மாமாயன் மாதவன் வைகுந்தன் என்று என்று நாமம் பலவற்றையும்” மாலையாகத் தொடுத்தால் போதும் என்கிறாள் ஆண்டாள். மாமாயன் என்றால் மாயனுக்கு எல்லாம் மாயன் என்று சொல்லலாம். மாயனை define செய்ய திருமழிசை ஆழ்வார் பாடல் ஒன்று போது.
ஆனைகாத்து ஓர் ஆனை கொன்று, அது அன்றி, ஆயர் பிள்ளையாய்
ஆனை மேய்த்து; ஆ-நெய் உண்டி; அன்று குன்றம் ஒன்றினால்
ஆனை காத்து மை-அரிக்கண் மாதரார் திறத்து முன்
ஆனை அன்று சென்று அடர்த்த மாயம் என்ன மாயமே?
கோவிந்தா……
பல்லவி
கோவிந்தா உந்தன் பாதம் பணிந்தேன்
தீவினைகள் போக்கிடும் மாயக்கண்ணனே
அனுபல்லவி
தேவி நப்பின்னை தனை மணந்த கேசவனே
தேவகி மைந்தனே தேவாதி தேவனே
சரணம்
குவலயாபீடமெனும் ஓரானையைக்கொன்றாய்
அவதியுற்ற ஆனை கஜேந்திரனைக் காத்தாய்
ஆவினையும் ஆயரையும் குடையின் கீழ் சேர்த்தாய்
ஆவின் நெய்யுண்டாய் எருதுகளையழித்தாய்
No comments:
Post a Comment