சதுரங்க பலாபேதாம் தனதான்ய ஸுகேஸ்வரீம்
அச்வாரூடா மஹம் வந்தே ராஜலக்ஷ்மீம் ஹிரண்மயீம்
அச்வ பூர்வாம் ரதமத்யாம் ஹஸ்திநாத ப்ரபோதினீம்
ச்ரியம் தேவி முபஹ்வயே ஸ்ரீர்மாதேவீர் ஜுஷதாம்.
ஶ்ரீபெருந்தேவிதாயார்திருவடிகளேசரணம்🙏🙏🙏🙏
ரத, கஜ, துரக, பதாதி எனும் நால்வகைப் படைகளுக்கும் தலைவியே, சுகங்களை அருளும் ஈஸ்வரியே, குதிரையில் ஆரோகணித்து வருபவளே, தங்கத்தை அருளும் ராஜலக்ஷ்மியே, குதிரைகளால் இழுக்கப்படும் ரதத்தின் நடுவே அருளும் காஞ்சிபுர பெருந்தேவி தாயார் வடிவினளே, தங்களை பூஜிக்கும் என்னை கடைக்கண் கொண்டு காக்க வேண்டும்.
பெருந்தேவித்தாயாரின்……
பல்லவி
பெருந்தேவித் தாயரின் பதமலர் பணிந்தேன்
வருந்தித்துதிப்பவர்க்கு வரங்களையருளும்
அனுபல்லவி
திருமால் கேசவன் அத்தி வரதன் மார்பில்
பெருமையுடன் வீற்றிருக்கும் அழகிய அலைமகளின்
சரணம்
நால்வகைப் படைகளை ஆளும் ஶ்ரீதேவியை
தோல்வியில்லாதவளை சுங்களைத்தருபவளை
குதிரை மேலமர்ந்திருக்கும் பொன் தரும் திருமகளை
தங்கரதத்தில் வலம் வரும் காஞ்சி மாநகர் வளர்
No comments:
Post a Comment