கண் விழித்தேன்……
பல்லவி
கண் விழித்தேன் கணபதியே உன் முன்னே இன்று
கண்பார்த்தெனையே ஆண்டருள்வாயே
துரிதம்
கணங்கள் நந்தி நரபதி நரர்சுரர்
அணங்குகள் சித்தி புத்தி வணங்குமுன் முன்
அனுபல்லவி
வெண்ணிலவுப் பிறையணிந்த சங்கரன் மகனே
கண்ணபிரான் கேசவன் மனங்கவர் மருகனே
சரணம்
மண்ணில் உனையன்றி வேறு தெய்வம் எனக்கில்லை
எண்ணிய கருமங்கள் தடையின்றி நடைபெற
புண்ணியம் செய்தோர்கள் பணிந்திடும் கரிமுகனே
பண்ணிசைத்துப் பாடியுன் மலரடி பணிந்தேன்
No comments:
Post a Comment