பாராமுகமேனோவென…….
பல்லவி
பாராமுகமேனோவென பரிதவிக்குமீசனையே
பாராத பார்வதியே எனக்கு மட்டுமருள்புரிவாய்
அனுபல்லவி
ஆராவமுதன் கேசவன் சோதரியே
ஓராயிரம் பெயருடைய திரிபுரசுந்தரியே
சரணம்
தீராவினைகளையும் தீர்த்தருளும் மாயவளே
சேராதருடனே சேர்ந்தழிந்தேன் சில காலம்
பாரிலுனையன்றி வேறுதெய்வமில்லையென்றே
மாறி மனம் திருந்தி உனைப் பணிந்தேன் தாயே
No comments:
Post a Comment