படித்தேன்! ரசித்தேன்! பாடல் புனைந்தேன்!
கானமியற்றி…..
பல்லவி
கானமியற்றி நானும் களித்தேன்
கோனந்தக் கேசவன் புகழ்பாடித் திரிந்தேன்
அனுபல்லவி
தானந்தமில்லாத தீனசரண்யன்
வான் புகழ் கொண்ட நாராயணனைப் போற்றி
சரணம்
ஆனந்தமளிப்பது அன்பும் கருணையும்
தேனென இனிப்பது அறிவும் அழகும்
ஊனமெனும் மன இருள் நீக்குவதந்த
ஞானமெனுமுயர் சச்சிதானந்தமே
No comments:
Post a Comment