“அருள் தருவாய் ஶ்ரீ பாண்டுரங்கா”
உனதருள் தருவாய் ஶ்ரீ பாண்டுரங்கா
உனைப்போற்றி உன்புகழை அனுதினம் நான்பாட
மனதிலுனை நினந்து கேசவனே உனை ப்போற்றி
ஜனங்கள் மகிழ்ந்திட உன் லீலைகளை ப்பாட
வனமாலை கௌஸ்துபம் துளபமணிந்தவனே
வினதையின் மகனை வாகனமாய்கொண்டு
விரைந்து சென்று கஜராஜன் துயர் தீர்த்தவனே
உனையழைத்துக் கதறிய அபலைக்கருள் தந்தவனே
உனை வேண்டித் துதி்த்த பக்த பிரகலாதனுக்கும்
பாலகன் துருவனுமருள் தந்த திருமாலே
கனமழையாலவதியுற்ற ஆயர்குல மாந்தர்களை
குன்றேந்திக் குளிர் மழை காத்த கோபாலனே
No comments:
Post a Comment