இதைவிட ஆனந்தம்….
பல்லவி
இதைவிட ஆனந்தம் வேறென்ன வேண்டும்
சீதாபதியே ஓ ரகுராமா
அனுபல்லவி
கதைகள் பேசி உனது லீலைகளை
இதமுடன் பாடிடும் அடியாருடனிருக்கும்
சரணம்
விதம் விதமான உன் நாமங்களையோதி
பதம் பணிந்து பாடுமடியார்களுடன் கூடி
கேசவனே மாதவனே மதுசூதனனேயென
ஆசையுடன் துதிக்கும் பாக்கியமல்லாது
No comments:
Post a Comment