கண்ணணனைப்பில்…..
பல்லவி
கண்ணணணைப்பில் கண் மயங்கி நின்றேன்
வண்ணப் பட்டாம்பூச்சி மனதில் பட படக்க
அனுபல்லவி
எண்ணங்கள் முழுதுமே கேசவனவன் நினைவு
வெண்ணிலவு முகமும் தாமரை மலரிதழும்
சரணம்
அண்ணாந்து காணவுமியலாத நாணம்
கண்ணனெனையன்போடு ஆரத்தழுவிடப்
புண்ணியமென்ன செய்தேனென்று வியந்தேன்
கண்ணா உனையன்றி வேறு துணை எனக்கில்லை
No comments:
Post a Comment