கடின மனம்……
பல்லவி
கடின மனம் கூடாது ஶ்ரீராமா உனக்கு
அடிக்கடி உனைத்துதிக்கும் எனக்கருள மறுக்கும்
அனுபல்லவி
கொடிய அரக்கர்களைக் கொன்றழித்த கேசவனே
கொடியிடையாள் ஜானகியின் மனங்கவர்ந்த மாதவனே
சரணம்
படித்த மாமுனிகள் பலர் போற்றும் ராகவனே
முடிவும் முதலுமில்லாப் பர தெய்வம் நீயே
அடுத்து வந்த எனை இனியும் தள்ளலாகாது
நெடுமாலே உனையன்றி வேறு தெய்வம் எனக்கில்லை
No comments:
Post a Comment