புன்னகையொன்றே…..
பல்லவி
புன்னகையொன்றே போதுமே ஶ்ரீ ராமா
என் வினைகள் அகல யான் கடைத்தேற
அனுபல்லவி
சென்னகேசவனே திருப்பாற்கடல் கிடக்கும்
பன்னகசயனனே பார் போற்றுமழகனே
சரணம்
முன்னமகலிகையின் சாபம் தீர்த்தவனே
இன்னும் சபரிக்கு மோட்சமளித்தவனே
கன்னலே தேனே இன்னமுதே என
அன்னை கோசலை மடிவைத்துக் கொஞ்சுமுன்
No comments:
Post a Comment