காமாக்ஷி உமையே……
பல்லவி
காமாக்ஷி உமையே கரம் பணிந்தேனே
பாமரனெனையே காத்தருள்வாயே
அனுபல்லவி
காமனைப் படைத்த கேசவன் சோதரி
காமேச்வரன் சிவன் மனங்கவர் நாயகி
சரணம்
பூமியில் உனையன்றி வேறோர் புகலில்லை
மாமறைகள் போற்றும் ஓங்காரப் பொருளே
தேமதுரத்தமிழில் பாமாலை புனைந்து
கோமகளே உந்தன் மலரடியில் வைத்தேன்
காமக்ரோதாதி அறுபகையகற்றிட
தூமலர் தூவியுன் நாமங்களாயிரம்
மாமணியே போற்றி வாயார உரைத்தேன்
தாமதமின்றியே அருள் தர வேண்டினேன்
No comments:
Post a Comment