வானமே ஆடையாய்…..
பல்லவி
வானமே ஆடையாய் வெட்டவெளியே கூரையாய்
மோனத்தவம் செய்யும் வெக்காளியைத் துதித்தேன்
அனுபல்லவி
கானக் குழலூதும் கேசவன் சோதரியை
கூனல் புறையணிந்த சங்கரன் நாயகியை
சரணம்
வானவரும் தானவரும் மாலயனும் மறையும்
கானுறை முனிவரும் காமனும் பணிந்தேத்த
ஞானப்பிழம்பாய் ஶ்ரீநகரம் தனிலுறையும்
தேனார்மொழியாளை ஶ்ரீ லலிதாம்பிகையை
No comments:
Post a Comment