பிணியறிந்து……
பல்லவி
பிணியறிந்து மருந்திடும் வைத்தியநாதனே
பணிந்தேனுன் மலர்ப்பதம் எனக்கருள் புரிவாய்
அனுபல்லவி
மணி மந்திரம் மருந்து அனைத்தும் நீயே
பணிந்துன் பதம் தேடிய கேசவன் நேசனே
சரணம்
பணியாதவர்க்கு பிணியாயிருப்பவனே
பணிந்திடும் கணங்களுக்கும் அமரருக்கும் சுரபதிக்கும்
குணமளிப்பவனே சிவபெருமானே
அணியென அரவுதனைக் கழுத்திலணிந்தவனே
No comments:
Post a Comment