*முத்தாலம்மனை……
பல்லவி
முத்தாலம்மனைப் பரமேச்வரியை
சித்தத்தில் வைத்து சீரடி பணிந்தேன்
அனுபல்லவி
சத்தியகிரிநாதன் கேசவன் சோதரியை
உத்தமியை உமையை க்காமேச்வரியை
சரணம்
பித்தன் சிவபெருமானிடம் கொண்டவளை
வித்தகர் வேதியர் போற்றும் மகேச்வரியை
பத்தினித் தெய்மெனப் பாரோர் கொண்டாடும்
நித்திய கல்யாணியை தத்துவப்பொருளை
முத்து மணிகளை மாலையாய்க் கோர்த்தவளை
சித்து விளையாடல் பல செய்திடுமீச்வரியை
உடுக்கு பாசம் கபாலம் திரிசூலமேந்தும்
மிடுக்கானவளை இடுக்கண் களைபவளை
* பரமகுடி முத்தாலம்மன்
No comments:
Post a Comment