அடுத்தவர்க்குதவும்…..
பல்லவி
அடுத்தவர்க்குதவும் மனம் தருவாய் ராமா
எடுத்த ஜனனம் பயனுள்ளாய் செய்ய
அனுபல்லவி
உடுக்கை இழந்தவர்க்கும் இடுக்கண் வந்தவர்க்கும்
அடுத்திருந்து நன்மை செய்யும் குணம் தந்திடுவாய்
சரணம்
நடுக்கடல் நடுவே பாம்பணை மீது
படுத்திருக்கும் கேசவனே பாற்கடல் வாசனே
அடுத்து வந்த என்னை இனியும் தள்ளலாகாது
தடுத்தாட்கொள்ள தருணமிதுவே
No comments:
Post a Comment