சர்வேச்வரனை……
பல்லவி
சர்வேச்வரனை சதா துதித்தேன்
அற்புதமானவனை அகிலாண்டேச்வரனை
அனுபல்லவி
நிர்மலமானவனை வர்மமில்லாதவனை
சர்வமுமவனென அறிந்தே தெளிந்தே
சரணம்
தர்ம நெறிகாக்க தரணியிலுதித்தவனை
பற்பலரும் போற்றும் பரம்பொருளானவனை
மர்மமாயிருப்பனை மறைபொருளானவனை
கற்பனைக்கெட்டாத கேசவனை ஈசனை
No comments:
Post a Comment