திருடனையும்…….
பல்லவி
திருடனையும் நல்லவனாய் மாற்றும் விட்டலனை
திருடி வெண்ணையுண்ட கேசவனைப் பணிந்தேன்
அனுபல்லவி
திருமகள் ருக்மணியை தன் மார்பில் தாங்கும்
திருமாலை ப்பண்டரிபுரத்துறையுமழகனை
சரணம்
ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஒருத்தி மகனாய் வளர்ந்த
பெருமைக்குரியவனைப் பேரருளாலனை
வரும் பிணியிடர் நீக்கும் கருணைக்கடலை
இருவினைப் பயனகலச் செய்திட வேண்டுமென
No comments:
Post a Comment