காண வேண்டும்……
பல்லவி
காண வேண்டும் வயலூர் முருகனை
பேண வேண்டுமவன் மலர்ப்பதம் தனையே
அனுபல்லவி
தூணைப் பிளந்து வந்த கேசவன் மருகனை
ஆணழகனை ஆறுமுகத்தோனை
சரணம்
கோணல் பிறையணிந்த சங்கரன் மகனை
நாணம் மறந்த வள்ளியை மணந்தவனை
மோனத்தவம் செய்யும் முனிவர்கள் போற்றும்
மாணப் பெரிய கலியுக க்கடவுளை
No comments:
Post a Comment