சாஸ்வதமில்லா இப்புவி வாழ்வில்
சாதகமேதும் செய்திலேன் தாயே
சாஸ்வதமான இமையவளே நின்
சரணகமலமதை பற்றியே
சாதகப் பறவையாய் நின்னருட் மழைக்காக
சந்ததமும் காத்து நிற்கிறேன்
சந்ததமும் காப்பவளே
சடுதியில் வந்தென்னை காத்திடு தாயே
சாம்ப பரமேஸ்வரி சங்கரியே
சரணம் சரணம் தர்மாம்பிகையே
நிலையிலா உலகில்…….
பல்லவி
நிலையிலா உலகில் நிலைத்திருப்பவளே
மலைமகளே தாயே தர்மாம்பிகையே
அனுபல்லவி
அலையாழி துயிலுறும் கேசவன் சோதரியே
மலைமீது குடிகொண்ட சிவபெருமான் நாகியே
சரணம்
நிலையிலாது மழைநீருக்காகவே
அலைந்து திரிந்திடும் சாதகப் பறவை போல்
அலைந்தேன் நானும் உனதருள் மழைக்காக
அலையவிடாதெனையாண்டருள்வாயே
No comments:
Post a Comment