Monday, 27 February 2023

எந்தையை…..

எம்பிரான் எந்தை - என்னுடைய பெருமானும், என்னுடைய தந்தையும். என்னுடைச்சுற்றம்* எனக்கரசு - என் உறவினனும், என்னை ஆள்பவனும், என்னுடைவாணாள்* - எல்லா நேரங்களிலும், எல்லா வகையிலும் என்னை ரட்சிக்கும் என் உயிரானவனும், அம்பினால் அரக்கர் - அம்பால் அசுரர்களைவெருக்கொள நெருக்கி* - அஞ்சி நடுங்கும்படியாக ஒடுக்கிஅவருயிர்செகுத்த - அவர்கள் உயிரை மாய்த்தஎம் அண்ணல்* - எனது (கிலேச நாசனான) இறைவனும்வம்புலாம்சோலைமாமதிள்* - மணம் வீசும் சோலைகளும் உயர்ந்த மதில்களும் சூழ்ந்ததஞ்சை மாமணிக்கோயிலேவணங்கி*- தஞ்சையின் மாமணிக்கோயிலில் எழுந்தருளியுள்ளவனும் ஆன அப்பெருமானைத் தொழுதுநம்பிகாள் - (சதா சர்வ காலமும் அவ்வண்ணலையே சிந்தையில் நிறுத்தியிருக்கும்) கற்றறிந்த அடியார்களே!உய்ய நான் - உய்வு பெறும் வழியை யான்கண்டு கொண்டேன் - (அவன் அருளால்) கண்டு கொண்டேன் !நாராயணா என்னும் நாமம் - “நாராயணா” எனும் நாமத்தை ஓதுவதன் வாயிலாக!


                                   எந்தையை…..


                                       பல்லவி

                      எந்தையை  எம்பெருமான் கேசவனை

                      சிந்தையில் வைத்து சீரடி போற்றினேன்

                                    அனுபல்லவி

                       முந்தைய நாளில் அரக்கர் செருக்கழித்து

                       விந்தைகள் பல புரிந்த என்னண்ணலை

                                           சரணம்

                       பந்துவும் தோழனுமாய் அருகிருந்து காக்கும்

                        சொந்தமானவனை  மாமணிக்கோயிலுறை

                        செந்தாமரைக் கண்ணனை உய்யும் வழிகாட்டும்

                         சுந்தரனை ஶ்ரீமன் நாரயணனை

                                   

                                   

No comments:

Post a Comment