காலன் வருமுன்னே கண் பஞ்சடை முன்னே
பாலுண் கடைவாய்ப்படுமுன்னே மேல்வி ழுந்தே
உற்றார் அழுமுன்னே ஊரார் சுடுமுன்னே
குற்றாலத் தானையே கூறு ! - -பட்டினத்தார்
ஞாலமுண்ட வாயனையோ…….
பல்லவி
ஞாலமுண்ட வாயனையோ ஆலமுண்ட கண்டனையோ
சீலமுடன் துதித்திடுவாய் மனமே தினமே
அனுபல்லவி
வாலறிவன் கேசவனோ அவன் நேசன் ஈசனையோ
மூலக்கடவுளென மூதறிஞர் கொண்டாடும்
சரணம்
காலன் வருமுன்னே கண்கள் கெடும் முன்னே
பாலுண்ட வாயின் பற்கள் விழு முன்னே
மேலே விழுந்தூராருற்றாரழுமுன்னே
கோலமுடன் உன் முன்னே எழுந்தருளிக் காட்சி தரும்
No comments:
Post a Comment