தினமுனை…….
பல்லவி
தினமுனைத் துதித்திடும் பக்தருக்கெல்லாம்
கனவு மெய்படச் செய்யும் கணபதியே
அனுபல்லவி
வனமாலையணிந்த கேசவன் மருகனே
அனங்கனையெரித்த பரமசிவன் மகனே
சரணம்
சினந்தரக்கன் கஜமுகனின் சிரம் கொய்த கரிமுகனே
உனைப் பணிந்து தொடங்கும் பூசைகள் கருமங்கள்
அனைத்தும் தடையின்றி நடந்திட அருள்பவனே
வினைகளைத்தீர்ப்பவனே மலர்ப்பதம் பணிந்தேன்
சனகாதி முனிவர்களுமமரருமமரேந்திரனும்
கணங்களும் நந்தியும் நாரதரும் நான்முகனும்
தனங்களின் அதிபதியும் மூவரும் தேவியரும்
அனவரதம் வணங்கும் ஆதியே பரிபூரணனே
No comments:
Post a Comment