தேனார்மொழியாளே…….
பல்லவி
தேனார்மொழியாளே மீனாம்பிகையே
கானமியற்றியுன் பாதம் பணிந்தேன்
துரிதம்
வானவர் தானவர் இந்திரன் நான்முகன்
கானுறை முனிவர்களனைவரும் வணங்கிடும்
அனுபல்லவி
ஆனிறை மேய்க்கும் கேசவன் சோதரியே
மான் மழுவேந்திய சங்கரன் நாயகியே
சரணம்
கூனல் பிறையணிந்த மீன் விழியாளே
வான் புகழ் கொண்டவளே மலையரசன் மகளே
ஊனம் களைந்தென் மன இருள் நீங்கிட
ஞானமளித்தெனை ஆண்டருள்வாயே
No comments:
Post a Comment