அண்ட சராசரகளனைத்தையும்…..
பல்லவி
அண்ட சராசரங்களனைத்தையும் காப்பவனே
கண் கண்ட தெய்வமே கேசவனே உனைத்துதித்தேன்
அனுபல்லவி
பண்டு மூவடியால் உலகளந்த வாமனனே
எண் திசையும் கொண்டாடும் முழுமுதற்கடவுளே
சரணம்
வண்டியை இழுப்பதுவோ மாடுகளென்றாலும்
வண்டி நடப்பது தம்மாலே என்றெண்ணி
வண்டிச்சக்கரங்கள் சத்தமிடுவதுபோல
மண்டூக மாந்தர்களின் அலப்பறையை என் சொல்ல
No comments:
Post a Comment