கிரிராஜகுமாரி……
பல்லவி
கிரிராஜகுமாரி பார்வதி உனைத் துதித்தேன்
பரிந்தருள் புரிவாயென மலர்ப் பதம் பணிந்து
துரிதம்
நரர் சுரர் சுரபதி சுகசனகாதியர்
நாரதர் நான்மறை துதித்துப் போற்றும்
அனுபல்லவி
கரியவன் கேசவன் சோதரி கௌரி
எரிதழலேந்தும் முக்கண்ணன் நாயகி
சரணம்
விரிந்து பரந்த உலகையாள்பவளே
அரியயனரன் பணியும் ஶ்ரீலலிதாம்பிகையே
கரிமுகனையும் காமனையும் படைத்தவளே
சரி சமமென ஒருவரில்லாத ஈச்வரியே
புரியாத புதிர் நீயே பெரிய நாயகியே
விரி கமல மலர்தனை கையில் வைத்திருப்பவளே
திரிபுரனை அழித்த திரிபுரசுந்தரியே
மரித்தல் பிறத்தலெனும் பவச்சுழலில்லாதொழிய
No comments:
Post a Comment