மலைராஜனின் பெண்ணான அம்பாள் காமாக்ஷி தன் பாத ஒளியால் நாற்புறமும் அதாவது எல்லாத் திசைகளையும் ஒளி மயமாகச் செய்கிறாள் ! செக்கச் சிவந்த நிரமாக்குகிறாள். தேவியின் திருவடி உத்திதெழு ம் பால சூரியனுடைய கிரணங்களுக்கு மூல திரவியமாக இருப்பதோடு, தேவேந்திரன் திசையாகிய கிழக்குத்திசையில் சூர்யன் தன் கிரணங்களைப் பரப்புவது போல் அம்பாளின் திருவடிகள் தன்னை வணங்குவோர் ஆசையை நிறைவு செய்கிறது !! தேவியின் பாத
செவ்வொளி அஞ்ஞானம் என்ற அக இருளை அழிக்கிறது! கிழக்கு மட்டுமல்லாது எல்லாத்திசைகளிலும் உள்ள அனைத்து தேவருக்கும் மெய்ஞ்ஞானம் என்ற ஒளியை அளிக்கிறது ! அழகான உவமை அம்பாள் பாதத்தோடு சூர்ய ஒளியை ஒப்பிடுவது !
படித்தேன்!ரசித்தேன்! பாடல் புனைந்தேன்!
மலையரசன் மகளை…..
பல்லவி
மலையரசன் மகளை மனமாரத்துதித்தேன்
அலைமகள் நாயகன் கேசவன் சோதரியை
அனுபல்லவி
நிலையிலா உலகில் நிலைத்திருப்பவளை
கதிரவனொளியை கழலடியில் தருபவளை
சரணம்
பரிதி உதித்தெழும் கிரணங்களொளி போல
திருவடித்தாமரை ஒளியெங்கும் பரவ
இருளெனுமஞ்ஞானம் நீக்கி மெய்ஞான
அருளினை சுரபதிக்குமமரருக்குமளிக்கும்
No comments:
Post a Comment