மங்களம் தரும்…….
பல்லவி
மங்களம் தரும் கணபதி எங்கிருந்தாலென்ன
இங்கு நமக்கிரங்கி அருள் தந்தால் போதுமே
துரிதம்
திங்கள் ஞாயிறு கணங்கள் நந்தி
நரர் சுரர் நான்முகனிந்திரன் வணங்கிடும்
அனுபல்லவி
எங்கும் நிறைந்திருக்கும் கேசவன் மருகன்
பொங்கரவணிந்த சங்கரனின் அன்பு மகன்
சரணம்
சங்கரி சரஸ்வதி உடனிருந்து கொண்டாடும்
மங்கள மூர்த்தி மோதகப் பிரியன்
அங்குச பாசம் கரங்களிலேந்தியே
அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருக்கும்
No comments:
Post a Comment