கதம்பவனம்……
பல்லவி
கதம்பவனம் தனிலமர்ந்திருப்பவளே
நிதமுனை துதித்தேன் ஶ்ரீலலிதாம்பிகையே
துரிதம்
தேவரும் மூவரும் தேவேந்திரனும்
யாவரும் வணங்கிடும் திரிபுரசுந்தரி
அனுபல்லவி
விதம் விதமாய் பல புதுப்பாடல் புனைந்துன்
பதமலரில் வைக்கும் பாக்கியம் தருவாய்
சரணம்
சதமிலா உலகில் சதம் நீ மட்டுமே
இதம் தருபவளே கேசவன் சோதரி
மதம் மொழி இனமெனும் பேதங்கள் கடந்துன்
பதம்தனைப் பணிந்தேன் பராசக்தியே
No comments:
Post a Comment