மஞ்சள் கலந்த ஒரு வித ஆரஞ்சு கலரில் பட்டு வஸ்திரம் , தங்க ஒட்டியாணம் மெல்லிய இடுப்பை எடுத்துக்காட்டியது. எப்போதும் போல் என்றும் நெஞ்சில் நிலைத்த ரெங்கநாதன். நித்ய ஸ்ரீயாக.
நெற்றியில் கஸ்தூரி திலகம். காதில் வைரதோடு மாட்டலுடன் தகதகவென ஜொலித்தது.முகத்தில் தேஜஸ். அபயய ஹஸ்தம் . இத்தனைக்கும் மகுடமாய் வைரமுடி .
இன்று வைரமுடி சேவை . கம்பீர தோற்றம் . ஒரு பேரரசி சாம்ராஜ்ய தாயினி சிம்மாசனத்தில் அமர்ந்த போன்ற அற்புத கோலம் . இருக்காத பின்னே ? இவள் யார்??
பட்ட மகிஷி அதாவது ரெங்கராஜனின் மனைவி ரெங்கராஜ்யத்தின் அரசி, பெருமாளுக்கு பூருஷகாரபூதை. தலைவிகளுக்கு எல்லாம் தலைவி.
இப்பேர்ப்பட்ட தாயாரை கண்குளிர சேவித்த பின் நெஞ்சம் உருகாதா? உள்ளம் குளிர்ந்து கண்ணீர் பெருகாதா ? உமா என்கிற சரண்யா, ஸ்ரீரங்கம்
செங்கண்மால்……
பல்லவி
செங்கண்மால் திருவரங்கன் பட்டத்து ராணியை
ரங்கநாயகியை மனமாரத்துதித்தேன்
அனுபல்லவி
திங்கள் திருமுகத்தாளை வைரமுடியணிந்தவளை
பங்கச்செல்வியை பாற்கடலிலுதித்தவளை
சரணம்
தங்க ஒட்டியாணமிடுப்பிலணிந்தவளை
செங்கதிரெனத் திலகம் நெற்றியில் திகழ
அங்கம் தனிலணிந்த மஞ்சள் பட்டுடை மின்ன
தொங்கும் மாட்டலுடன் வைரத்தோடொளி வீச
No comments:
Post a Comment