உக்ர நரசிம்மன்
பல்லவி
கோர நரசிம்மனை மனமாரத் துதித்தேன்
ஆராவமுதனாய் குடந்தையிலெனையாண்ட
அனுபல்லவி
ஓராயிரம் நாமமுடைய திருமாலை
பாரோர் பணிந்தேத்தும் பேரருளாளனை
தாரகைகள் கோர்த்த மாலையாய்க் காட்சிதரும்
கரங்களாலரக்கன் மார்பினை பிளந்து
ஈரக்குலை நடுங்க இரணியனை வதைத்த
நாராயணனைக் கேசவனை மாதவனை
சரணம் 2
தாரணியைத் தடையின்றி வலம் வரும் சீதரனை
பூபாரமொன்பதாய்த் தன்னிமையால் பிரித்தவனை
மாறாப் பகைவர்களை நடுங்க வைக்கும் நரஹரியை
தீராயென் பவப்பிணியை தீர்த்தருள வேண்டுமென
sphurayati tava sakshat saiva nakshatra-mala
kshapita-ditija-vaksho-vyapta-nakshatra-marga /
ari-dara-dhara-janvasakta-hasta-dvayaho
daha daha narasimhasahy-viryahitam me //
ari-dara-dhara-janvasakta-hasta-dvayaho
daha daha narasimhasahy-viryahitam me //
No comments:
Post a Comment