சித்திர கணபதி
பல்லவி
சித்திரத்தில் எழுந்தருளி மனதை கவர்ந்திடும்
மத்தள வயிற்றானை மனமாரத் துதித்தேன்
அனுபல்லவி
வித்தகரும் வியந்து போற்றும் வண்ணம்
சித்தத்தை மயக்கிடும் பலவித தோற்றத்தில்
சரணம்
நற்றவ முனிவரும் நந்தியும் கணங்களும்
சித்தரும் யோகியரும் தேவரும் பணிந்திடும்
உத்தமி புதல்வனை கேசவன் மருகனை
முத்தமிழ் போற்றும் விக்ன விநாயகனை
No comments:
Post a Comment