பாலசந்திரன்
பல்லவி
கண்கவரழகனை பாலசந்திரனை
பண்ணிசைத்துப் பாடி மனமாரத் துதித்தேன்
அனுபல்லவி
வெண் பட்டுடுத்தி வேழமுகத்துடன்
தண்மதி பிறையணிந்த கேசவன் மருகனை
சரணம்
விண்ணவரும் மண்ணவரும் நந்தியும் கணங்களும்
எண்ணிலா முனிவரும் தேவரும் வணங்கிடும்
சண்முகன் தமையனை சங்கரி மைந்தனை
புண்ணியம் செய்தோர்க்கருளும் ஆனைமுகத்தோனை
No comments:
Post a Comment