பானைக நரசிம்மன்
பல்லவி
பானைக நரசிம்மநுனை மனமாரத் துதித்தேன்
வானகமும் வையகமும் பணிந்தேத்தும் மாதவனே
அனுபல்லவி
தேனார் மொழியாள் திருமகளைத் தன் மார்பில்
தானாக வைத்திருக்கும் அழகிய சிங்கனே
சரணம்
மீனாயாமையாய் அவதரித்த ஸ்ரீ தரனே
தீனசரண்யனே திருமாலே கேசவா
நானுனக்கு குற்றேவல் செய்திடும் பாக்கியம்
நீயெனக்கருள வேண்டுமெனப் பணிந்து
No comments:
Post a Comment