தாசன் கேசவன்
பல்லவிஉனக்கே அடிமையாய் தொண்டு செய்திருக்கும்
பாக்கியம் எனக்கருள்வாய் கோவிந்தா
அனுபல்லவி
தனக்குவமை இல்லாத தனிப்பெருங்கடவுளே
வனமாலை துளபமணிந்திடும் கேசவா
சரணம்
தினகர குலத்துதித்த ஸ்ரீ ரகு ராமனே
தனம் புகழ் பதவி எதுவும் வேண்டேன்
வனங்கள் சோலைகள் நிறைந்த திருமலையில்
தினமுந்தன் திருநாமம் வாயாரப் பாடி
No comments:
Post a Comment