விக்ன விநாயகன்
பல்லவி
ஈசன் மகனை மகாகணபதியை
நேசமுடன் வணங்கி மனமாரத் துதித்தேன்
அனுபல்லவி
பேசும் தெய்வமாய்க் கலியுகக் கடவுளாய்
காசினி போற்றும் கேசவன் மருகனை
சரணம்
நீசன் யானைமுக அரக்கனை அழித்தவனை
ஆசாபாசத் தளைகளைக் களைந்திடும்
மாசறு பொன்னை மாசிலாமணியை
தேசுடையானை விக்ன விநாயகனை
No comments:
Post a Comment