திருவேங்கடமுடையான்
பல்லவிபரிபூரணனைக் கருணாகரனை
அரி கோவிந்தனை மனமாரத் துதித்தேன்
அனுபல்லவி
திரிவிக்கிரமனை உலகளந்த பெருமாளை
சரிநிகர் சமான மில்லாத கேசவனை
சரணம்
விரிகமலமலரேந்தும் திருமகளை மார்பில்
தரித்திருப்பவனை ஏழுமலையானை
மரித்தலும் பிறத்தலுமில்லாமல் செய்து
பரிந்தருள் புரிந்திடும் வேங்கடமுடையானை
No comments:
Post a Comment