ஆதிவினாயகன்
பல்லவிமலர்மாலைகளணிந்த மகாகணபதியை
ஆனை முகத்தோனை மனமாரத் துதித்தேன்
அனுபல்லவி
திலதர்ப்பணபுரி ஆதிவினாயகனை
உலகெலாம் படைத்தவனை உமையவள் மைந்தனை
சரணம்
நலம் தரும் கரிமுகனைக் கேசவன் மருகனை
நிலவின் பிறையணிந்த வேழ முகத்தோனை
புலன் வழி செல்லும் மனம் தனையடக்கிடும்
பலம் தர வேண்டுமெனத் திருவடி பணிந்து
No comments:
Post a Comment