Monday, 8 September 2014

ஸ்ரீ மகா கணபதி


ஸ்ரீ மகா கணபதி 


    பல்லவி

   தாமரை மலர்மீது  வீற்றிருக்கும் கரிமுகனை

    ஏழையேன்  எனைக்காக்க வேண்டுமெனத் துதித்தேன்

     அனுபல்லவி

    கோமகனவன் நாமம் நெஞ்சார நினைந்து

   தேமதுரத் தமிழால் பாமாலை பல பாடி

        சரணம்

     ஆமருவியப்பன்  கேசவன் மருகனை

      ஓமெனும் மந்திரப் பொருளானவனை

       பாமரர் பண்டிதர் யாவரும் வணங்கிடும்

      ஸ்ரீமகா கணபதியை அய்ங்கரனை

   

 
 


No comments:

Post a Comment