தாடாளன்
பல்லவி
தாடாளன் திருவடியை மனமாரத்துதித்தேன்
பாடலிக வனத்தில் எழுந்தருளிக் காட்சி தரும்
அனுபல்லவி
கோடானு கோடித் தவம் செய்யும் முனிவரும்
வாடாமலர் லோகநாயகியும் பணிந்தேத்தும்
சரணம்
நாடித்துதிப்பவர்க்கு நலமளிக்கும் மாலவன்
ஈடாகத் தனக்கெவரும் இல்லாத கேசவன்
ஓடோடி வந்தடியார் குறைகளைத் தீர்ப்பவன்
மூவடியாலுலகளந்த திரிவிக்கிரமன்
No comments:
Post a Comment