வாமனன் மருகன்
பல்லவி
வாமனனா யவதரித்த கேசவன் மருகனை
விக்ன விநாயகனை மனமாரத் துதித்தேன்
அனுபல்லவி
காமனைப் பழிக்கும் பேரெழிலுடையவனை
சாமமுதல் வேதங்கள் போற்றுகின்ற தேவனை
சரணம்
தாமரை மலரமர் பிரமனும் தேவரும்
மாமுனிவர்களும் நந்தியும் கணங்களும்
பாமரரும் பண்டிதரும் வணங்கிடும் கரிமுகனை
கோமகனை ஆனை முகத்தோனை கணபதியை
No comments:
Post a Comment