ஆடும் கண்ணன்
பல்லவி
அசைந்தாடும் கண்ணனை அழகான கேசவனை
அசைவின்றி நின்று கண்ணாரக் கண்டேன்
அனுபல்லவி
திசை நான்கும் புவியேழும் வானோரும் காண
இசையோடு ஜதியோடு விசையோடு விரைவாக
தக்கிட தரிகிட தளாங்கு தகதிமி
தளாங்கு தகதிமி தகதிமி தகவென
சரணம்
கைவளை குலுங்க முத்து மாலைகளுமாட
காலிலிட்ட கொலுசும் தண்டைகளுமாட
காதிரண்டிலும் மகரக் குண்டலங்களாட
கொண்டையில் சூடிய மயில் பீலியாட
கண்ணிரண்டில் விழியாட ஊதும் குழலாட
கற்றைக் குழலாட நெற்றிச்சுட்டியாட
மார்பில் மறுவாட துளபம் கௌத் துபமாட
கட்டிய பட்டாடை காற்றிலசைந்தாட
வசைபாட வந்த கோபியருமாய்ச்சியரும்
மெய் மறந்து வசமிழந்து உடன்சேர்ந்து ஆட
காணும் கோபாலரும் களிப்புடனே ஆட
மறையாட மயிலாடக் கன்றோடு பசுவாட
No comments:
Post a Comment