தெள்ளிய சிங்கர்
பல்லவி
திருவல்லிக்கேணி வளர் தெள்ளிய சிங்கரை
திருவடி பணிந்து மனமாரத் துதித்தேன்
அனுபல்லவி
இருபுறம் தேவியர் உடனிருந்து காட்சிதரும்
திருமாலைக் கேசவனை மதுசூதனனை
சரணம்
குரு நாரதரும் தேவரும் பிரமனும்
அருமறையும் சனகாதி முனிவரும் வணங்கிடும்
பெருமைக் குரியவனை பேரருளாளனை
இரணியனை வதம் செய்த தீனசரண்யனை
No comments:
Post a Comment