மதுசூதனன்
பல்லவி
மதுசூதனநுனை மனமாரத் துதித்தேன்
கதியுன் பதமென துதிபல செய்து
அனுபல்லவி
புதுப்புது அவதாரம் எடுத்த கேசவனே
மதுராதிபதே மாயக் கண்ணனே
சரணம்
பதும நிதியும் சங்க நிதியும்
எதுவும் வேண்டேன் இனி வரும் பிறப்பிலும்
ஏழையேன் உனது பதம் தனை மறவாத
மனமொன்றே போதுமென உனையே வேண்டி
No comments:
Post a Comment