துதிக்கையன்
பல்லவிஅதிசயமாக அரவணையிலமர்ந்து
பவனி வரும் துதிக் கையனைப் பணிந்தேன்
அனுபல்லவி
மதியாத யானைமுக அரக்கனை வதைத்தவனை
மதியணிந்த கரிமுகனைக் கேசவன் மருகனை
சரணம்
விதியையும் மாற்றும் வல்லமை படைத்தவனை
புதியவை தொடங்கும் முன் அனைவரும் வணங்கிடும்
மதிசேகரன் மகனை மத வாரண முகனை
துதித்திடுமடியார்க்கு நலமளிக்கும் கணபதியை
Ganesha in sesha (snake) vahanam !
No comments:
Post a Comment