Friday, 5 September 2014

அறிந்ததுமறியாததும்

   

     அறிந்ததுமறியாததும் !        

           **********************

          தந்தையும் தாயும் இவருக்கில்லை

            சொந்தமும் பந்தமும் எவருமில்லை

            இரவுபகலெனும் பேதமில்லை

             பள்ளியும் கல்வியும் அறிந்தவரில்லை

              நல்லது கெட்டது தெரிந்தவரில்லை 

              பெரிவர் சிறியவர் பேதங்களில்லை

               உறவும்  பிரிவும் உணர்ந்தவரில்லை

               சொத்தும் சுகமும் ஏதுமில்லை

               மொத்தத்தில் இவர்கள்

                  கடவுளின் பிள்ளைகள்

                 இவர்கள் அறிந்த ஒன்றே ஒன்று

                 "பசியின் வலியின் வேதனை  மட்டுமே "         

No comments:

Post a Comment